சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தின் புரோமோ வீடியோ
05 பிப், 2023 – 13:20 IST
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லியோ படத்தில் விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான நிலையில் படக்குழு தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளது. அது குறித்த வீடியோ புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், நேற்று விஜய் 67வது படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோவும் வெளியானது. இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
என்றாலும் சோசியல் மீடியாவில் இந்த புரோமோ பல படங்களில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். அதோடு ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் இடம் பெற்ற காட்சி ஒன்று லியோ புரோமோவில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் வெளியான அயன் மேன் உள்ளிட்ட சில படங்களில் இருந்தும் காட்சிகள் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறும் நெட்டிசன்கள், அது குறித்த புகைப்படங்களையும் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours