Goudamani Joke Broght Laughter In Late Director Gajendran Funeral | இயக்குநர் கஜேந்திரன் மறைவு: துக்க வீட்டிலும் நகைச்சுவை செய்த கவுண்டமணி…

Estimated read time 1 min read

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் உடலுக்கு நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார். மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் இல்லம் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளது. அவரது வீட்டிற்கு செல்வதற்கு ஒரு சிலர் லிப்டை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று காலையில் முதலமைச்சர், அஞ்சலி செலுத்த வரும்போதும் லிப்ட் மிகவும் மெதுவாகவே இயங்கியது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மறைந்த இயக்குநரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது, லிப்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்தவரிடம்,’இயக்குனர் எப்போ இறந்தார்’ என கேள்வி கேட்டார். அதனைத் தொடர்ந்து, ‘லிப்ட் எங்கே’ என்று கேட்டு விட்டு, ‘லிப்ட் நடந்து வரும் போல இருக்கு’ என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கூற அங்கு இருந்தவர்கள் சிரித்தனர்.’ 

மேலும் படிக்க | பிரபல நகைச்சுவை இயக்குநர் டி.பி. கஜேந்திரன் காலமானார்

இயக்குனரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது பூமாலைகள் அவரது கால் பகுதியில் போடப்பட்டிருந்தது. அதனை கவனித்த கவுண்டமணி மாலை கழுத்துக்கு தான் போட வேண்டும், ஏன் காலுக்கு போட்டு உள்ளீர்கள்” என கிண்டலாக கூறினார்.

டி.பி.கஜேந்திரன் (71) தமிழ் சினிமாவில் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு எங்க ஊரு காவல்காரன், பாண்டிய நாட்டு தங்கம், மிடில்கிளாஸ் மாதவன் உள்ளிட்ட 27 திரைப்படங்களை இயக்கினார். 

அதேபோல் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறர். டி.பி. கஜேந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், டி.பி. கஜேந்திரன். 

இந்த நிலையில், இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  அவருடைய மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டி.பி. கஜேந்திரன் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனராக உயர்ந்தவர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகினர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | Vani Jairam passes away: பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours