வீட்டிற்குள் நுழைந்த இரண்டு வறுவல்வாதிகள்
இரண்டு சிறப்பு விருந்தினர்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர். நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுரேஷ் தாத்தா. தலைப்பா கட்டிக் கொண்டு உள்ளே வந்தார். இன்னொரு அஹமத். யூட்யூப் மற்றும் இன்ஸ்டாவில் பிரபலமானவர். நையாண்டியான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார், ஒருவரை வறுத்தெடுப்பதில் மாஸ்டராம்.
அமுதவாணனின் புறணி பேசும் தன்மையை நிறைய முறை டார்கெட் செய்து கிண்டலடித்தார் சுரேஷ். ‘அமுதென்பதா விஷமென்பதா.. ‘ என்கிற பாடல் வேறு. ஆனால் அதற்கு அமுது பொருத்தமானவர்தான். கமலின் முன்னால் அசிமை பயங்கரமாக போட்டுக் கொடுத்து விட்டு, இன்னொரு புறம் அசிமுடன் தோளிலும் கை போட்டுக் கொள்கிறார்.
ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு பெட்டிக்குள் போட்டு விட்டு அன்பாக்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிராடக்ட்டின் நிறை குறைகளை இருவரும் ஜாலியாக, குத்தலான நகைச்சுவையுடன் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆக மனிதர்களும் ஆன்லைன் ஆர்டரில் வந்த பொருள் மாதிரி ஆகி விட்டார்கள். ரிட்டர்ன் பாலிசி இருக்கிறதா என்று தெரியவில்லை. “இந்த வீட்டுக்கு ஆறு முறை வந்திருக்கேன். பிக் பாஸ் நல்ல அடையாளத்தை தந்தது. நிறைய படங்களில் நடித்தேன்” என்று பெருமிதமாகச் சொன்ன சுரேஷ் தாத்தாவை பாசத்துடன் வரவேற்றார் பிக் பாஸ் தாத்தா.
+ There are no comments
Add yours