கண்ணன் நாராயணின் இசை படத்துக்கு ஜீவனாய் இருக்கிறது. பின்னணியில் கதையோடு நம்மை ஒன்றச் செய்வதில் இசையின் பங்கும் சவுண்ட் டிஸைனிங்கின் பங்கும் அதிகம். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ‘யார் அறிந்ததோ’ என்ற பிரதீப் குமாரின் பாடல் படம் முடிந்ததும் நம் மனதைக் கரைக்கிறது. கிராமத்தில் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைக் கொடுக்கிறது மார்டின் டான் ராஜின் சிறப்பான ஒளிப்பதிவு.
அதேபோல நிகழ்காலக்கதை, பெரியவரின் நினைவுகளில் வரும் காதல் எபிசோடு, சமுத்திரக்கனியின் நினைவுகள் என அனைத்தும் மாறிமாறி வரும் காட்சிகளும், மேஜிக்கல் ரியலிஸக் காட்சிகளும், மாற்று சினிமா பாணியிலான மெதுவான கதை சொல்லலும் சில இடங்களில் நம்மைச் சோதிக்கவே செய்கின்றன.
+ There are no comments
Add yours