Singer Vani Jairam passes away: சென்னை நுங்கம்பாக்கம் ஹாடாஸ் சாலையில் அமைந்துள்ள எரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் (78) வசித்து வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி உள்ளார். இந்த நிலையில், இன்று (பிப். 4) காலை 11 மணியளவில் பின்னணி பாடகி வாணி ஜெயராமன் இல்லத்தில் பணி செய்வதற்காக பணிப்பெண் மலர்கொடி என்பவர் வந்துள்ளார்.
பலமுறை பணிப்பெண் மலர்கொடி இல்லத்தின் கதவை தட்டியும் திறக்காத காரணத்தினால் பணிப்பெண் மலர்கொடி வாணி ஜெயராமனின் தங்கை உமா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் இல்லத்திற்கு வந்த உமா, தன் வைத்திருந்த மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து பார்த்துள்ளார்.
Legendary Singer Vani Jairam passes away in Chennai. She was 78.
The Government has announced #PadmaBhushan award for her this year. pic.twitter.com/jbqYc8WP3J
— All India Radio News (@airnewsalerts) February 4, 2023
அப்பொழுது பின்னணி பாடகி வாணி ஜெயராம் மயங்கிய நிலையில் தரையில் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் பின்னணி பாடகி வாணி ஜெயராமனை சோதித்து பார்த்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாணி ஜெயராமனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூார் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tamil Nadu | Veteran playback singer Vani Jairam found dead at her residence in Chennai, say Thousand Lights Police officials. Details awaited.
She was conferred with the Padma Bhushan award for this year.
(Pic: Vani Jairam’s Facebook page) pic.twitter.com/TEMHbHw11s
— ANI (@ANI) February 4, 2023
மேலும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் தொடர்பாக திருவல்லிக்கேணி இணை ஆணையர் சேகர் தலைமையிலான ஆயிரம் விளக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Shocking news, renowned singer #VaniJairam (78) was found dead in her home in #Chennai today. Only last month she was awarded the #padmabhushan in January. #RIPVaniJairam pic.twitter.com/XMkZXQZpWB
— Sreedhar Pillai (@sri50) February 4, 2023
தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். இவர் 1973ஆம் ஆண்டு வெளியான தாயும் சேயும் படம் மூலம் இவர் அறிமுகமானார். இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றன்றனர்.
மேலும் படிக்க | RIP: நடிகர் இயக்குநர் கே விஸ்வநாத் அமரரானார்! 93 வயதில் மரணித்த திரைநட்சத்திரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours