அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன்? – ட்விட்டர் பயோ மாற்றம் | Vignesh Shivan Removed AK62 From His Bio he will not part of ak62 anymore

Estimated read time 1 min read

அஜித்தின் ‘ஏகே 62’ படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பயோவில் ‘ஏகே 62’-வை நீக்கியுள்ளார்.

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார். ‘ஏகே 62’ என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், பிப்ரவரி மாதம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் ‘ஏகே 62’-ல் இலிருந்து விக்னேஷ் விலகப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் ‘ஏகே 62’ என இருந்ததை நீக்கியுள்ளார். மேலும், அஜித்தின் புகைப்படத்தை கவர் போட்டோவில் வைத்திருந்தவர் தற்போது அதையும் நீக்கி அதற்கு பதிலாக பின்வாங்காதே’ (never gove up) என கவர்போட்டவை வைத்துள்ளார்.

இதையடுத்து, அவர் அஜித்தின் ‘ஏகே62’ படத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours