தமிழில் 1973-ல் ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். 1975-ல் ‘ஆபூர்வ ராகங்கள்’ படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னனிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காலி ௭னப் பல இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதினை வென்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களின் விருதுகளையும் வென்றுள்ளார்.
திரையுலகில் 10,000-த்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours