2/3/2023 12:48:43 PM
சகு பாண்டியன் இயக்கியுள்ள படம், ‘என் இனிய தனிமையே’. ஆட்டோ புலி பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பி.மாலதி தயாரித்துள்ளார். ஆட்டோ புலி முருகன் நிர்வாகத்தயாரிப்பு பொறுப்பு ஏற்றுள்ளார். ஹீரோவாக ஸ்ரீபதி, ஹீரோயினாக ரீஷா நடிக்கின்றனர். சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் ேக.கிங் இசையில் உருவாகியுள்ள ‘பெண்டுலம்’ படத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா ஆகியோருடன் நடித்துள்ள பதி, அடுத்து மோகன் டச்சு இயக்கத்தில், கே.யு.கார்த்திக் இசையில் உருவாகியுள்ள ‘அங்காரகன்’ படத்தில் சத்யராஜ், மலையாள நடிகை நியா ஆகியோருடன் நடித்துள்ளார்.
இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான கருத்துகளுடன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘என் இனிய தனிமையே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது. தங்கர்பச்சான் இயக்கிய படங்களில் பணியாற்றிய சிவபாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். ‘சீதா ராமம்’ படத்தின் மலையாள வெர்ஷனில் இடம்பெற்ற ‘ஒரு கரையாரிகே’ பாடல் புகழ் சிபி னிவாசன் காதல் ததும்பும் பாடலையும், வைக்கம் விஜயலட்சுமி அம்மா சென்டிமெண்ட் பாடலையும் பாடியுள்ளனர்.
+ There are no comments
Add yours