2/2/2023 4:00:55 PM
சென்னை: தான் படித்த சட்டக் கல்லூரிக்கு சென்று பழைய நினைவுகளை வீடியோவில் பகிர்ந்துள்ளார் மம்மூட்டி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வக்கீலாக பணியாற்றியவர் மம்மூட்டி. இப்போது 71 வயதாகும் மம்மூட்டியின் இளமைக்காலம், கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில்தான் கழிந்தது. தற்போது மம்மூட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் படம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் சட்டம் படித்த கல்லூரிக்கு நேற்று முன்தினம் மம்மூட்டி சென்றார். தனது வகுப்பறை, அங்கு அவர் அமர்ந்த இடம், நண்பர்களுடன் அரட்டை அடித்தது, பேராசிரியர்களிடம் திட்டு வாங்கியது என எல்லாவற்றையும் பற்றி பேசி வீடியோ வெளியிட்டார். இதில் அவர் பேசும்போது, ‘இது எர்ணாகுளம் லா காலேஜ். இப்போது நான் இருப்பது தான் என் ஃபைனல் இயர் கிளாஸ் ரூம். இப்போது இங்கு வகுப்புகள் இல்லை.
இண்டோர் கோர்ட் பகுதி இங்கு உள்ளது. அதில் சில நிகழ்ச்சிகளும் நடத்தினோம். இந்த இடம் பழைய திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் கொச்சி சட்டசபை ஹாலாக இருந்தது’ என்றார். மம்மூட்டியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours