தொல். திருமாவளவனின் ட்வீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்களிடம் சண்டை இன்னும் சூடு பிடித்துள்ளது.
‘நாட்டில் பேச வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஒரு கட்சித் தலைவர் இப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில வந்து ஓட்டுக் கேக்கறது நல்லாவா இருக்கு. இந்த அரசியல் கலப்பு நல்லதில்லை’ எனக் கண்டிக்கிறவர்கள், இதற்காகவே அசிமுக்குத்தான் டைட்டில் தர வேண்டுமெனக் கோரிக்கையும் விடுக்கிறார்கள்.
ஆனால் ‘கோபம், முரட்டுத்தனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாத அசிமுக்கு டைட்டில் தந்தால் அது மோசமான முன்னுதாரணமாகி விடும்’ என இதற்கு எதிர் வினையாற்றுகின்றனர், விக்ரமனுக்கு ஆதரவானோர்.
தொல்.திருமாவளவனின் ட்வீட் குறித்து நடிகர் அசீமின் தம்பியும் ஃபேமிலி விசிட்டின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தவருமான ஆதிலிடம் பேசினோம்.
”அறம் வெல்லும்’னு சொல்லி விக்ரமனுக்கு திரு. திருமாவளவன் ஆதரவு கேட்கறதெல்லாம் கொஞ்சம் மிகையான நடவடிக்கையோனு தோணுது. ஏன்னா, அது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி. கலந்துக்கிடுற எல்லாருக்குமே சம்பளம் தர்றாங்க. சமூக நீதி சார்ந்த கருத்துக்களை அந்த நிகழ்ச்சி மூலமா பரப்பறதால விக்ரமனுக்கு ஆதரவு கேட்கிறோம்னு சொல்றதையும் ஏத்துக்க முடியாது. ஏன்னா, சமூக நீதிக்கு எதிரா அந்த வீட்டுக்குள்ள என்ன நடந்ததுனு விக்ரமனுக்கு ஆதரவு தர்றவங்கதான் விளக்கணும். ஒரு பொறுப்பான சேனல்ல அந்த மாதிரி எந்த விஷயங்களையும் அனுமதிக்க மாட்டாங்க.
+ There are no comments
Add yours