‘திடீர்னு தேசியக் கட்சிப் பக்கம் போயிடீங்களே, என்ன காரணம்’ என அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
”மத்திய அரசு மூலமா மக்களுக்கு எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனா, அது குறித்து நம் மக்கள்கிட்ட விழிப்புணர்வு இல்லை. தேசியக் கட்சியில இருந்தா அந்தத் திட்டங்கள் எல்லாருக்கும் கிடைக்கறதுக்கு உதவலாம்னு தோணுச்சு.
தவிர, நான் மக்கள் நீதி மய்யத்துல சேர்ந்து செயல்படலாம்னு போனேன். ஆனா அந்தக் கட்சியில வெளியில பேசறது ஒண்ணாகவும் கட்சிக்குள் நடக்கறது வேறொண்ணாவும் இருக்கு. அதனால அங்க என்னால இருக்க முடியலை.

எல்லாத்துக்கும் மேல தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எனக்கு பிடிச்சிருக்கு. அதனால அவரது தலைமையின் கீழ் அந்தக் கட்சியில சேர்ந்து செயல்படலாமேன்னு நினைச்சுதான் அவரைப் போய் சந்திச்சேன். ஆர்வமாக வரவேற்றார். சில தினங்களில் முறைப்படி என்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டு தீவிரமா கட்சிப் பணிகள்ல ஈடுபடலாம்னு இருக்கேன்” என்றவரிடம்,
+ There are no comments
Add yours