தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு வாரிசு படம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே இருந்தது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டபோதும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று மட்டுமே கூறி வந்தார். பின்னர் தளபதி 67 படத்தை நீங்கள் இயக்கப்போகிறீர்களா? என கேட்கப்பட்டபோது, மௌனத்தை பதிலாக கொடுத்த லோகேஷ் கனகராஜ் அதைப் பற்றி மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என கூறிக் கொண்டே இருந்தார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023
மேலும் படிக்க | விஜய்க்கு அம்மாவை விட அப்பாவை தான் பிடிக்கும் – மனம் திறந்த S.A.சந்திரசேகர்!
அப்போதே தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இடையில் வாரிசு படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்ததால், அந்த படத்திற்கு ஸ்பாய்லராக எதுவும் அமைந்துவிடக்கூடாது என தளபதி 67 அறிவிப்பை பொத்தி பொத்தி வைத்திருந்தனர். ஒருவழியாக கடந்த வாரம் கோவை சென்ற லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அறிவிப்பு இம்மாத இறுதியில் வரும் என தேதியை குறிப்பிட்டே சொல்லிவிட்டு வந்தார்.
— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023
ஆனால், பிப்ரவரி 1 ஆம் தேதி தான் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலையே அதாவது ஜனவரி 30 ஆம் தேதியே தளபதி 67-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
— Anirudh Ravichander (@anirudhofficial) January 30, 2023
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தளபதி 67 அறிவிப்பை வெளியிட்டு, விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல் இசையமைப்பாளர் அனிரூத், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தளபதி 67 அப்டேட்டை வெளியிட்டு, தானும் தளபதி 67-ல் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மாஸ்டர் கூட்டணியான விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி 67-ல் இணைந்திருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டர் பெரும் நிலநடுக்கத்தையே உண்டாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நொடிகளிலேயே இந்தியளவில் தளபதி 67 ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
மேலும் படிக்க | ’எனக்கு பல உருவ கேலிகள் நடந்திருக்கு’ பொம்மை நாயகி புரோமோஷனில் யோகிபாபு எமோஷ்னல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours