ஸ்டன்ட்ஸ் சிறப்பா வர, கேமராமேன் நிரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் மிலன் இவங்களோட பங்களிப்பும் ரொம்ப முக்கியமானது. ஒரு டீமா நீங்க எல்லாரும் சேர்ந்து ஒர்க் பண்ணின அனுபவம் எப்படியிருந்தது?
“‘துணிவு’ படத்துக்காக வினோத் என்னை மீட் பண்ணிப் பேசினார். ஸ்கிரிப்ட் படிச்சேன். ஸ்டன்ட்டுக்குப் படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த புராஜெக்ட் பத்தி யார்கிட்டயும் வெளியே சொல்ல வேண்டாம்ன்னு சொன்னார். என்னுடைய மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்கள்கிட்டக் கூடச் சொல்லாம அமைதியா இருந்தேன். அப்புறம் ஹைதராபாத்ல படத்தோட ஷூட்டிங்குக்காக செட் வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. செட்டுக்கு முதல்ல போய் பார்த்தேன். அப்போதிருந்தே படத்தோட கேமராமேன் நீரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் மிலன், நாங்க மூணு பேரும் நிறைய டிஸ்கஷன் பண்ணுவோம். எந்த இடத்துல ஸ்டன்ட் காட்சிகள் வைக்கலாம்ன்னு நான் முடிவு பண்ணி மிலன்கிட்ட சொல்லுவேன். அதுக்கு ஏத்த மாதிரி அவர் செட் அமைத்துக் கொடுத்தார்.”
‘டார்க் டெவில்’ அஜித்தை முதன் முதலா எப்பப் பார்த்தீங்க? படம் தொடர்பா அவர் உங்ககிட்ட சொன்ன விஷயம் என்ன?
“படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அஜித் சார் மீட் பண்ணினார். நாங்க எல்லாரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். நைட் டின்னரின் போது அந்தச் சந்திப்பு நடந்தது. ஸ்டன்ட் காட்சிகள் பத்திப் பேசுவார்னு நினைச்சேன். ஆனா, பேமிலி பத்திப் பேசிட்டு, எனக்குச் சாப்பாடு பரிமாறிட்டு நலம் விசாரிச்சுட்டு அவர் கிளம்பிட்டார். அப்பவே இந்தப் படத்துக்காக 15 கிலோ குறைச்சிருந்தார். முதல் முறையா பார்த்தப்போ அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. ஒரு ஆக்ஷன் ஹீரோவா பக்கவா ரெடியாகி வந்து நின்னார்ன்னுதான் சொல்லணும்.
அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல மீட் பண்ணுறப்போ, ‘மாஸ்டர், என்னைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசியிருக்காங்க. அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுடுங்க. ஒரு புதுமுக நடிகரை ட்ரீட் பண்ற மாதிரி எனக்கு வேலை கொடுங்க’ன்னு சொன்னார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. படத்தில் யூஸ் பண்ண வெடிகுண்டுகள் அத்தனையும் ஒரிஜினல். இதை ஷூட்டிங் ஸ்பாட்ல பயன்படுத்தவே கொஞ்சம் பயம் இருந்தது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் இடம் அது. அதனால், பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அஜித் சார் அதுல ரொம்பக் கவனமா இருந்தார். ஒவ்வொரு பைட் சீன் எடுக்கறதுக்கு முன்னாடியும் நிறைய ரிகர்சல்ஸ் நடந்துக்கிட்டே இருக்கும். அது எல்லாத்துலயும் அஜித் தவறாம கலந்துகிட்டார்.”
+ There are no comments
Add yours