பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த்
30 ஜன, 2023 – 10:29 IST

2023 பொங்கலுக்கு பாலகிருஷ்ணா நடிப்பில் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் தெலுங்கில் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படம் வெளிவந்து 100 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. அப்படத்தைப் பார்த்து இயக்குனருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
அது குறித்து படத்தின் இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி, “இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். தலைவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. அவர் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். படத்தைப் பற்றி அவர் பாராட்டிய வார்த்தைகள், அவர் உணர்ந்த உணர்வுகள் ஆகியவற்றை விட இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமில்லை. நன்றி ரஜினி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணா நடித்த ‘வீரசிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
+ There are no comments
Add yours