Pathaan: 1500 நாள்களுக்குப் பிறகு ஷாருக்கான் படம்; FDFS பார்க்க 200 நகரங்களில் 50000 ரசிகர்கள் ரெடி! | 50,000 fans gather in 200 cities to watch Shah Rukh Khan’s Pathaan

Estimated read time 1 min read

‘பதான்’ படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் அதனைக் காண ஷாருக்கான் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். படத்தின் முதல் பாடல் வெளியான போதே பெரும் சிக்கலை எதிர்கொண்ட ‘பதான்’ படத்தை எப்படியேனும் வெற்றி பெறச்செய்யவேண்டும் என்பதில் ஷாருக்கான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வரும் 25ம் தேதி முதல் நாள் முதல் காட்சியைக் காண ‘ஷாருக்கான் யுனிவர்ஸ்’ என்ற ரசிகர் மன்ற அமைப்பு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மொத்தம் 200 நகரங்களில் ஒரே நேரத்தில் முதல் காட்சியை 50,000 பேர் பார்க்கவிருக்கின்றனர்.

'பதான்' படத்தில் தீபிகா படுகோன்

‘பதான்’ படத்தில் தீபிகா படுகோன்

இது குறித்து ஷாருக்கான் யுனிவர்ஸ் இணை நிறுவனர் யாஷ் பர்யானி கூறுகையில், “முதல் நாள் முதல் காட்சிக்கு 50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதல் காட்சியில் மட்டும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதனை அனைத்து நகரங்களிலும் செய்கிறோம். மும்பையில் மட்டும் 8 இடங்கள், டெல்லியில் 6 இடங்கள் என ரசிகர்களுக்காக முதல் நாள் முதல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours