உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். கோயிலின் பின்புறத்தில் 2668 உயரம் கொண்ட மலையை சுற்றிலும் உள்ள கிரிவலப் பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளது. இதனை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் ஆன்மீக ரீதியாக திருவண்ணாமலைக்கு அதிக அளவில் வெளிநாட்டின் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது சினிமா நடிகர்கள் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர்கள் அதேபோன்று சீரியலில் நடிகர்கள், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர்கள் என அனைவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வந்து தங்களின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் இயக்குனர் வம்சிபைடிபைலி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சிபைடிபைலி அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், நவகிரகங்கள் உள்ளிட்ட கோயிலின் பல்வேறு பிரகாரங்களில் வலம் வந்து தனது குடும்பத்துடன் மற்றும் படக்குழுவினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் சார்பில் திரைப்பட இயக்குனர் வம்சிபைடிபைலிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு கோயிலின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சிபைடிபைலி வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், வாரிசு திரைப்படத்திற்கு தமிழக மக்கள் வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர் எனவும், மக்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதன் பிறகு கோயிலுக்கு வந்த பக்தர்கள் வம்சியிடம் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்
+ There are no comments
Add yours