விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. சமூக வலைதாளங்களில் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவாக பலரும் ஓட்டுக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிக் பாஸ் டைட்டில் வெல்வதற்கான ரேஸில் அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், `மைனா’ நந்தினி ஆகியோர் இருந்த நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து நான்கு பேர் இறுதியாக களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் மிட் வீக் எவிக்ஷன் எனச் சொல்லி மைனா நந்தினியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர், என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள். இந்த மிட் வீக் எவிக்ஷன் பிக் பாஸ் திடீரென நிகழ்த்திய அதிரடி என்கிறார்கள். ஏனெனில் நான்கு பேர் இருக்க, கடைசி நாளில்தான் முதல் இருவர் வரிசையாக எவிக்ட் ஆக தொடர்ந்து ரன்னரும் வின்னரும் அறிவிக்கப் படுவார்கள். இதுதான் கடந்த சீசன்களில் நடந்தது.
+ There are no comments
Add yours