இந்நிலையில் “காலம் முழுவதும் போராடிக்கொண்ட இருக்கும் குணம் கொண்டவன் நான். என் போராட்டம் தொடரும், மக்களுக்கானப் பயணம் தொடரும். உலகம் முழுவதும் பரவி வாழக்கூடிய தாய் தமிழ்ச் சொந்தங்களான அனைவரது தீர்ப்பையும் தலைவணங்கி மனமார ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. ‘அறம் வெல்லும்’ என்று உறுதியுடன் பேசினார் விக்ரமன். கமலும் “இது வெற்றிக்காண முதல்படி. விக்ரமன் பேச்சை நானும் வழிமொழிகிறேன், ‘அறமே வெல்லும்'” என்று விக்ரமனின் பேச்சுக்கு ஆதரவு சேர்த்தார்.
இதையடுத்து கையில் பிக்பாஸ் வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி பேசிய அசிம், “அல்ஹம்துலில்லாஹ். புகழ் அனைத்தும் என்னைப் படைத்த இறைவனுக்கே. எனக்கு நல்லதை மட்டுமே சொல்லித்தந்த என் தாய் தந்தைக்கு என் இரண்டாவது கண் நன்றி. நான் விளையாட்டாச் சொன்னேன் என்ன 14 வாரமும் நாமினேட் பண்ணுங்க, நான் கண்டிப்ப ஃபைனல்ஸ் வருவேனு சொன்னேன். ஏன்னா, எனக்கு என் மேலையும் நம்பிக்கை இருக்கு, இறைவன் மேலையும் நம்பிக்கை இருக்கு, மக்கள் மேலையும் நம்பிக்கை இருக்கு. இதோ அதான் இந்த ரிசல்ட். முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும், வெற்றிக்குப் பின்னால் வருகிற மயக்கமும் மனிதனின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடும். நான் தோல்வி வந்தபோது வாடுனதுமில்ல வெற்றி வந்தபோது ஆடுனதுமில்ல. இப்போ வெற்றி வந்துருச்சு நான் ஆடப்போறது இல்ல. சமநிலையில்தான் இருப்பேன்.
+ There are no comments
Add yours