செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறிந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார், ரன்பீர் கபூர். இவர் நடிகை ஆலியா பட்டின் கணவரும் ஆவார். இவருக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதில் ரசிகர் ஒருவர், ரன்பீரை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அவரும், அந்த ரசிகருடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், ரசிகர் தன் செல்போனில் எடுத்த கேமராவில், ரன்பீருடன் எடுத்த செல்ஃபி பதிவாகவில்லை எனத் தெரிகிறது.
இதனால், மறுமுறையும் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போதும் பதிவாகவில்லை. ஆகையால் மீண்டும் இன்னொரு முறை அந்த ரசிகர் முயற்சி செய்ய, அதில் கோபமடைந்த ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் போனை தூக்கி எறிகிறார். அதன்பின், அவரைக் கண்டுகொள்ளாமல் ரன்பீர் விலகி செல்கிறார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “ரன்பீர் கபூர் செய்த செயல் வருத்தத்தைத் தருகிறது” எனப் பதிவிட்டும் வருகிறார்கள். இதையடுத்து, #angryranbirkapoor என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.
இருப்பினும் இது விளம்பர நோக்கத்துக்காக செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. உண்மை நிலவரம் இப்போதுவரை தெரியவில்லை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours