சிவகார்த்திகேயனின் பதிவு : அதிக லைக்குகளைப் பெற்று முதலிடம்
28 ஜன, 2023 – 10:42 IST
தமிழ் சினிமா உலகில் சமூக வலைத்தளங்களில் அதிகமான அளவில் பரபரப்பை ஏற்படுத்துபவர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர். அவருக்கு முன்னணி சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். அவருடைய பாடல்கள் யு டியுப் தளங்களிலும் அதிக பார்வைகளைப் பெறும்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்திற்கு 23 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு இது என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதை வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர் தளத்தில்தான் அதிகமாக செயல்படுவார்கள். ஆனால், சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் தளமும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து ‘மாவீரன்’ படம் வெளிவர உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் எனத் தெரிகிறது.
+ There are no comments
Add yours