இந்தப் படத்தில் ராதாரவி, சித்ரா லட்சுமணன், யோகி பாபு, டி.சிவா, கஞ்சா கருப்பு என பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, கெஸ்ட் ரோல்களில் பலர் வர உள்ளனர். அதில் கவுண்டமணியின் முன்னாள் மாணவராக நடிக்க சிவகார்த்திகேயனிடம், சந்தானத்திடமும் பேசி வருகிறார்கள். இருவரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள். இதில் சுவாரஸியம் என்னவென்றால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான அடுத்த கணமே, கவுண்டமணிக்கு போன் செய்த யோகிபாபு, ‘அண்ணே உங்க படத்துல ஒரு சீனாவது நான் இருக்கணும்னு விரும்புறேன். உங்க காம்பினேஷன்ல நடிக்கறேன் அண்ணே’ என தன் விருப்பத்தை சொல்லியிருக்கிறார். கவுண்டமணியும் ‘தாரளமா நடிக்கலாம் பாபு’ என க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்.
+ There are no comments
Add yours