குறிப்பாக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, கடந்த ஆண்டு நடந்த மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளை பதிவிட்டதோடு, பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியை அடக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக வெற்றி பெற்ற அஸ்ஸாம், புதுச்சேரியில் எந்தவித வன்முறையும் நடக்கவில்லை; ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வங்காளம் பற்றி எரிகிறது என்றும் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டிருந்தார். நேரு மற்றும் இந்திரா காந்தியையும் இதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மீண்டும் மீண்டும் ட்விட்டர் விதிகளை மீறி செயல்பட்டதால் கங்கனாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. எங்களது நடத்தை கொள்கையின்படி ஒருவரைத் துன்புறுத்தும் வகையில் பதிவிடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
+ There are no comments
Add yours