துணிவு, வாரிசு படங்களுக்கு இந்த 3 நாட்கள் மட்டும் சிறப்பு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி

Estimated read time 1 min read

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கான கூடுதல் சிறப்புக் காட்சி 3 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் பொங்கலை முன்னிட்டு நேரடியாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. இருநடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டாலே கொண்டாட்டமாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் இரு படங்களும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் சிறப்புக் காட்சிகளை பார்த்துவிடலாம் என ரசிகர்களும், சிறப்புக் காட்சியின் மூலம் அதிக வசூலை ஈட்டலாம் என விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் நினைத்து இருந்தனர்.

இந்தநிலையில், வரும் 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை 4, 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நேற்று தமிழ்நாடு அரசு சுற்றிக்கையை அனுப்பியிருந்தது.

image

இதனால் உச்ச நடிகர்களின் படங்களை வாங்கியிருந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருத்து நிலவியது. மேலும் திரையரங்குகளில் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும், கூடுதல் தொகை வசூல் செய்யக்கூடாது, தியோட்டர் வாசலில் கட் அவுட் வைக்கக்கூடாது, பால் அபிஷேகம் செய்யக்கூடாது என ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கை ஏற்று தமிழக அரசு கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கு கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அனுமதியளித்து தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours