கமல், த்ரிஷா வரிசையில் கோல்டன் விசா பெற்ற டிடி
09 ஜன, 2023 – 12:34 IST
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டை சேர்ந்த நடிகர் நடிகைகள் உள்பட தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பிரபலமானவர்களுக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த திரை பிரபலங்களான கமல்ஹாசன், நாசர், யுவன் சங்கர் ராஜா, பார்த்திபன், த்ரிஷா, அமலபால் மற்றும் லட்சுமி ராய் ஆகியோருக்கு அடுத்தடுத்து கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை தற்போது வழங்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள டிடி, கோல்டன் விசாவை வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சின்னத்திரை பிரபலங்களான வீஜே அர்ச்சனா, பாத்திமா பாபு உள்ளிட்ட பலரும் டிடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours