பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் – சுஷானே இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுமுகமாகப் பிரிந்துவிட்டனர். ஆனால், இருவரும் இப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். சுஷானே, அர்ஸ்லன் கொனி என்பவரைக் காதலித்து வருகிறார். இருவரும் வெளிப்படையாக இதனை அறிவித்துவிட்டனர். இருவரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்துகொள்கின்றனர். ஹ்ரித்திக் ரோஷனும் தற்போது சபா ஆசாத் என்பவரைக் காதலித்து வருகிறார்.
ஹ்ரித்திக் ரோஷனும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு தனது காதலியையும் அழைத்து செல்கிறார். கோவாவில் தனது முன்னாள் மனைவியின் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர்களின் காதலுக்கு ஹ்ரித்திக் ரோஷனின் குடும்பம் ஒப்புதல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஹ்ரித்திக் ரோஷன் முடிவு செய்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன், சபா ஆசாத் இருவருக்கும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலை அதிகமாக இருப்பதால் அதனை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்திருக்கின்றனர். திருமணமும் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படாது என்றும் எளிய முறையில் இரு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் என்று ஹ்ரித்திக் ரோஷனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+ There are no comments
Add yours