இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார், இவரது படங்கள் பெரும்பாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ என்கிற படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் இரண்டாவது முறை இவருக்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். இதற்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘நாச்சியார்’ படத்தில் இவானா நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக, இவருடன் ஜோடி சேர்ந்து ‘கள்வன்’ படத்தில் நடிக்கிறார். தமிழில் நாச்சியார் மற்றும் ஹீரோ போன்ற படங்களில் இவானா நடித்திருந்தாலும், பிரதீப் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘லவ் டுடே’ படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இப்படத்தின் மூலம்இவானாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்!
தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இவானா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஜனவரி 6ம் தேதியன்று நடிகர் தனுஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் படம் வெற்றிபெறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தியும் வெகுவாக கவர்ந்துள்ளது, பசுமை போர்த்திய அடர்ந்த காடுகளின் பிண்ணனியில் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது காடுகளையும், காட்டில் வாழக்கூடிய விலங்கினங்களையும் வைத்து ஒரு த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மட்டுமின்றி இதை சில நகைச்சுவை காட்சிகளும் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Here is #Kalvan #Chorudu motion poster starring my fav people @gvprakash @offBharathiraja .. best wishes team..@pvshankar_pv @AxessFilm @Dili_AFF @i__ivana_ @ActDheena @dhilipaction @thinkmusicindia pic.twitter.com/OEnGhM2wlf
— Dhanush (@dhanushkraja) January 6, 2023
‘கள்வன்’ படத்திற்கு ரமேஷ் ஐயப்பன் மற்றும் பிவி ஷனகர் ஆகியோர் திரைக்கதை எழுதி இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் மற்றும் இந்த படத்தில் தீனா, பாரதிராஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படங்களை தொடர்ந்து ஜி,வி.பிரகாஷ் வசம் ’13’, ‘டிராப் சிட்டி’ மற்றும் ‘இடிமுழக்கம்’ போன்ற படங்கள் உள்ளன. மேலும் அவர் தற்போது வாத்தி, வாடிவாசல், மார்க் ஆண்டனி மற்றும் தங்கலான் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும் படிக்க | பயம் இல்லாமல் பால் அபிஷேகம்… துணிவு படத்தை துணிவுடன் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours