இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் புரிந்த வசூல் சாதனையை தற்போது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் முறியடித்து, முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். ரூ.1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிச.16-ல் வெளியானது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. 10 நாட்கள் ஆன நிலையில், இந்திய அளவில் மட்டும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம், உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரூ 438 கோடி வசூலித்தது. ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் புரிந்த சாதனையை தற்போது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ முறியடித்துள்ளது.
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.439 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.15,000 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours