தூய்மை பணியாளரின் மகள் ஐஏஎஸ் படிக்க ஜெகபதிபாபு உதவி

Estimated read time 1 min read

தூய்மை பணியாளரின் மகள் ஐஏஎஸ் படிக்க ஜெகபதிபாபு உதவி

07 ஜன, 2023 – 10:51 IST

எழுத்தின் அளவு:


Jagapathi-Babu-Lends-Financial-Help-To-sweeper's-Daughter-Who-Aspires-To-Be-An-IAS-Officer

90களில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் சிவில் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த ஜெகபதிபாபுவின் தாயார் இது குறித்து தனது மகனிடம் கூறி அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அந்தப்பெண்ணை சந்தித்த ஜெகபதிபாபு, அவர் ஐஏஎஸ் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Advertisement

சர்வானந்த்துக்கு ஜன.,26ல் திருமண நிச்சயதார்த்தம் : முன்னாள் எம்எல்ஏவின் பேத்தியை மணக்கிறார்சர்வானந்த்துக்கு ஜன.,26ல் திருமண … உலகின் மிகப்பெரிய தியேட்டரில் 98 வினாடிகளில் விற்றுத்தீர்த்த ஆர்ஆர்ஆர் டிக்கெட்
உலகின் மிகப்பெரிய தியேட்டரில் 98 …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Thunivu

  • துணிவு

  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வினோத்

Tamil New Film Varisu

  • வாரிசு

  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours