சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் வெளியான ‘காட்ஃபாதர்’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் படம் ‘வால்டேர் வீரய்யா’. பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, கேத்ரின் தெரசா, நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ் ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – போதைப்பொருள் கடத்தல் தொடர்பான காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லரில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. படத்தைப் போலவே ஜாலியாகவும், காதல் பாடல்களுடனும் கட் செய்யப்பட்டிருக்கும் ட்ரெய்லரின் இறுதிப் பகுதி சென்டிமென்ட் மற்றும் கதையை நோக்கத்தை புரிய வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடவே ரவி தேஜாவின் மாஸ் இன்ட்ரோவும் இடையவே வரும் பாபி சிம்ஹாவும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகின்றன.
முழுக்க முழுக்க ஆக்ஷன், பஞ்ச் வசனங்களாக நீளும் ட்ரெய்லரின் இறுதியில் சிரஞ்சீவி – ரவி தேஜா நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்ட கச்சிதமாக வெட்டப்பட்டுள்ளது. படம் வரும் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:
+ There are no comments
Add yours