Ajith Thunivu FDFS Starts At 1 AM Across Tamil Nadu Director H Vinoth Confirmed

Estimated read time 1 min read

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் துணிவு. வரும் 11-ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி நிலையில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், துணிவு படத்திற்காக வரும் 10-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவது உறுதி என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் துணிவு. வரும் 11-ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி நிலையில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், துணிவு படத்திற்காக வரும் 10-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவது உறுதி என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் அறிவித்துள்ளார்.

news reels

வரும் பொங்கல் பண்டிகை தமிழ் திரையுலகிற்கு கொண்டாட்டம்ாக அமைய உள்ளது. வரும் ஜனவரி 11-ந் தேதி அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது. இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக இரு படங்களுக்குமான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், துணிவு மற்றும் வாரிசு படங்களின் ட்ரெயிலர்கள் ரிலீசான பிறகு இந்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள துணிவு படத்தில் நடிகர் அஜித் கொள்ளை கும்பல் தலைவனாக நடிக்கிறார். அவருடன் மலையாள பிரபல நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், சமுத்திரக்கனி, வீரா, பிரேம், பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மாறுபட்ட அஜித்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்கேற்றாற்போல துணிவு படத்தின் ட்ரெயிலரில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் ரக்ட் பாயாக தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இதனால், துணிவு படத்தின்  மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours