1/5/2023 12:46:13 PM
சென்னை: வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘வாரிசு’ பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆஃப் வாரிசு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வாரிசு படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட் வெளியானது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி நேற்று டிரெய்லர் வெளியானது. இதில் விஜய் ஸ்டைலாக தோன்றும் காட்சிகள், வசன காட்சிகள் இடம்பெற்றன. படத்தில் ஆக்ஷன், எமோஷன், காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. துணிவு 11ம் தேதி ரிலீஸ்: அஜித்தின் துணிவு படம் வரும் 11ம் தேதியே ரீலிஸ் ஆகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours