1/5/2023 12:53:59 PM
மாஸ்கோ: ரஷ்யாவில் திரையிடப்பட்ட அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் வசூலில் மற்ற இந்திய படங்களை முந்தியுள்ளது. இந்திய படங்கள் வெளிநாடுகளில் ரிலீசாகும்போது, ரஷ்யாவில் பெரும்பாலும் வெளியாவதில்லை. இந்திய படங்களுக்கு எப்போதாவதுதான் இங்கு மவுசு இருக்கும். இதனால் பெரும்பாலான படங்களை ரஷ்யாவில் ரிலீஸ் செய்வதை தவிர்த்துவிடுவார்கள். பெரும் பொருட் செலவில் உருவாகும் சில படங்களை மட்டும் ரஷ்யாவில் ரிலீஸ் செய்வார்கள். அதுவும் ரஷ்ய மொழியிலேயே ரிலீஸ் செய்வார்கள்.
இதுபோல் ரிலீஸ் செய்ததில் இந்திய படங்களில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் நடித்த வார் இந்தி படம்தான் அதிகமாக வசூலித்தது. இப்படம் ரூ.1 கோடியே 70 லட்சம் வரை படம் ஓடிய 2 மாதங்களில் வசூலித்தது. இது ரஷ்யாவில் அதிகம் வசூலித்த இந்திய படமாக உள்ளது. இந்த சாதனையை ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 என எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த புஷ்பா படம் ரஷ்ய மொழியில் டப் செய்து அங்கு ரிலீஸ் செய்தனர். கடந்த மாதம் ரிலீசான இப்படம் 774 தியேட்டர்களில் வெளியானது.
இதுவரை ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 2 லட்சம் வசூலித்துள்ளது. இதனால் வார் படத்தின் வசூலை இப்படம் நெருங்கிவிட்டது. இதுவரை எந்த தியேட்டரிலிருந்தும் படம் எடுக்கப்படவில்லை. இதனால் இப்படம் வார் பட வசூலை முந்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours