தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது ஸ்மார்ட் வில்லனாக அசத்திக் கொண்டிருப்பவர் வினய். ஆனந்த விகடன் சேனலின் ‘இன் அண்ட் அவுட்’ ஷோவில் வெளியான அவரது பேட்டியின் தொடர்ச்சி இது..
தமிழ்ல நல்லா பேசுறீங்களே… எந்த படத்தில் இருந்து சொந்தக் குரல்ல பேச ஆரம்பிச்சீங்க?
”என் முதல் படம் ‘உன்னாலே உன்னாலே’ அப்ப எனக்கு தமிழ் தெரியாததுனால அதுல என்னால டப்பிங் பேச முடியாம போச்சு. படம் பார்க்கறப்ப, ‘அது என் குரல் இல்லீயே’னு ஒரு ஃபீல் ஆச்சு. இனி என்னோட படங்கள்ல கண்டிப்பா என் குரல்ல பேசணும். அதை ஜனங்க ஏத்துக்குவாங்களா, மாட்டாங்களானு கூட கவலைப்படாமல் முடிவு எடுத்தேன். ‘மோதி விளையாடு’ படத்துல இருந்து பேச ஆரம்பிச்சேன். அதுல டப்பிங் பேசுறப்ப டயலாக்கை நான் தவறா பேசியிருந்தால் கூட, அங்கே இருந்த உதவி இயக்குநர்கள் என்கிட்ட சொல்லத் தயங்கினாங்க. நான் தப்பாதான் பேசியிருக்கேன்னு எனக்கே தெரிஞ்சது. ஆனாலும், அவங்க என்கிட்ட சொல்ல பயந்தாங்க. ஆனா, ‘அரண்மனை’யில் நான் டப்பிங் பேசுறப்ப சுந்தர்.சி சாரோட உதவி இயக்குநர்கள் ரொம்பவே உதவினாங்க. ‘துப்பறிவாளன்’ படத்தின்போது நான் டப்பிங் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மிஷ்கின் சார் என்கிட்ட ‘சரியா 45 நிமிஷத்துல நீ பேசி முடிச்சிடுவே’ன்னார். அவர் சொன்னது போலவே அதே நேரத்துக்குள் பேசிட்டேன்.”
நீங்க பேசுற வேகத்திலும், மேனரிசத்திலும் ரஜினி சாயல் தெரியுனு உங்ககிட்ட யாராவது சொன்னதுண்டா?
”அப்படி நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ‘உன்னாலே உன்னாலே’ அப்ப ஜீவா சாரே இதைச் சொல்லியிருக்கார். அடுத்து ‘ஜெயம்கொண்டான்’ படப்பிடிப்பில் விவேக் சார் இதைச் சொல்லி சொல்லி என்னை கலாய்ச்சிட்டிருப்பார். ‘உன்னோட ஸ்டைல் அவரை மாதிரியே இருக்கு..’னு அவர் சொல்றது மட்டுமில்லாம, ‘நீ இந்த வார்த்தையை சொல்லு.. அந்த வார்த்தையை சொல்லு’னு சொல்லி என்னை வச்சு காமெடி பண்ணுவார்.”
வினய், சிங்கிளா? கமிட்டெட்டா?
”நான் சிங்கிள் இல்ல. கமிட்டெட்.”
மேலும் காண கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்..
+ There are no comments
Add yours