நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர்.தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட முயல படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. ஆனால் தடைகளை தாண்டி படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு Vs துணிவு என்ற போட்டி உருவாகியிருக்கிறது.
இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூட்யூப்பில் பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில், விஜய், சரத்குமார், இயக்குநர் வம்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் விஜய்யின் பேச்சு வெகுவாக ரசிக்கப்பட்டது. மேலும், ட்ரெய்லர் எப்போது வெளியாகுமென்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
Namma Power Andha Ragam ..
It’s 1M+ real-time views..#VarisuTrailer https://t.co/7tsV1LmLyu#SunTV #ThalapathyVijay #Varisu #VarisuTrailerOnSunTV @actorvijay @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @karthikpalanidp @Cinemainmygenes #VarisuPongal pic.twitter.com/LjGFPx6Seg
— Sun TV (@SunTV) January 4, 2023
இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்க்கும்போது படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மேலும் விஜய்க்கு தகுந்தவாறு சில பஞ்ச் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
துணிவு ட்ரெய்லர் வெளியானதை அடுத்து வாரிசு ட்ரெய்லரும் வெளியாகியிருப்பதால் இரண்டு ட்ரெய்லர்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டுவருகின்றனர்.
மேலும் படிக்க | ரஜினி பாணியில் சிவகார்த்திகேயன் – ஆச்சரியத்தில் கோலிவுட்
மேலும் படிக்க | நஷ்டத்தை ஈடுகட்ட இந்த தயாரிப்பாளருடன் மீண்டும் இணைந்த கமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours