தனது குடும்பப்பெயரின் காரணம் குறித்து ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இது போன்ற அற்ப செயல்களில் ஈடுபடாதீர்கள் என்றும், இந்த உலகமே தனது குடும்பம் என்றும் ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.
திரையில் தொடங்கி ஆஃப் ஸ்க்ரீன் வரை கோடிக்கணக்கானோரை காந்தமென கவர்ந்திழுத்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். ’கிங் கான்’ எனப் போற்றப்படும் ஷாருக்கானுக்கு பாலிவுட் தாண்டி வெளிநாட்டு ரசிகர்கள் தான் அதிகம்.
தற்போது 57 வயதாகும் ஷாருக் 1990இல் தொடங்கி தற்போது வரை நிரந்தர பாட்ஷாவாகக் கோலோச்சி வருகிறார். ’ஃபாஜி’ எனும் தொலைக்காட்சித் தொடரில் தொடங்கிய ஷாருக்கானின் திரை வாழ்வு இன்றளவும் திரைத்துறைக்கு வரும் ஒவ்வொரு இந்திய நடிகருக்கும் உத்வேகமூட்டுவதாக அமைந்துள்ளது.
திரைப்படங்கள் தாண்டி தனது ரசிகர்களுடனான பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்கள், டாக் ஷோக்கள் என படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷாருக்.
அந்த வகையில் ட்விட்டரில் அவ்வப்போது #AskSrk எனும் ஹாஷ் டாகில் தன் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொள்ளும் ஷாருக், நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில் கவனமீர்த்துள்ளது.
’கான்’ எனும் குடும்பப்பெயரை உபயோகிக்கும் ஷாருக்கானிடம் நீங்கள் காஷ்மீர் பின்புலத்தைக் கொண்டு ஏன் இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள ஷாருக், ”உலகம் முழுவதுமே எனது குடும்பம். ஒருவர் குடும்பத்தால் பெயர் வாங்குவதில்லை. அது உழைப்பின் மூலம் சம்பாதித்தது. இதுபோன்ற அற்ப விஷயங்களில் ஈடுபடாதீர்கள்” என்று ஷாருக் பதிலளித்துள்ளார்.
The whole world is my family….family ke naam se naam nahi hota….kaam se naam hota hai. Choti baaton mein mat padho please. https://t.co/ctWPiUeUyO
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
தனது இஸ்லாமிய குடும்பப் பெயர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஷாருக் காட்டமாக பதிலளித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
’மை நேம் இஸ் கான்’ படத்தில் சராசரி வாழ்வில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசியது தொடங்கி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனிதப் பயணங்கள் மேற்கொள்வது வரை ஷாருக்கான் ஒரு இஸ்லாமியராக தன்னை தொடர்ந்து முன்னிறுத்து வருகிறார்.
ஷாருக், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours