official theatrical release date of Varisu and Thunivu movies announced | Thunivu vs Varisu துணிவுக்கு பின் வந்த வாரிசு அப்டேட் இந்த பொங்கல் யாருக்கு

Estimated read time 1 min read

Thunivu Varisu Release date : விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு திரையில் போட்டிப்போட உள்ளது பல மாதங்களுக்கு முன்னரே உறுதியானது. 2014ஆம் ஆண்டில் ஜில்லா – வீரம் படங்களுக்கு பின், விஜய், அஜித் இருவரும் சேர்ந்து தற்போது ஒரே நாளில் படத்தை களமிறக்க உள்ளதால் சினிமா ரசிகர்கள் குதூகலமடைந்தனர். 

அந்த வகையில், இரண்டு படக்குழுவும் தங்கள் படம் சார்ந்து பல்வேறு ப்ரமோஷன்களையும், அப்டேட்களையும் ரசிகர்களுக்கு வாரி வாரி வழங்கி வந்த நிலையில், ஒரே ஒரு அப்டேட்டை மட்டும் கடைசிவரை ரகசியமாகவே வைத்திருந்தனர். அது வேறு ஒன்றுமில்லை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிதான். 

குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் பெற்றிருந்தது. இதனையடுத்து வந்த திரையரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பாக சில பிரச்னைகள் வந்தது. பின்னர், வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களின் வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெய்ண்ட் வாங்கியது. 

மேலும் படிக்க | அஜித்தின் துணிவு: ரிலீஸ் தேதி அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இதனால், இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகுமா அல்லது வேறு வேறு நாள்களில் வருமா என்ற பேச்சுகள் வெளிவந்தன. இரண்டு படங்களும் முதலில் ஜன. 12ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், அதனை அதிகாரப்பூர்வமாக இருவரும் உறுதிப்படுத்தவேயில்லை. 

பின்னர், வாரிசு படம் ஜன. 11ஆம் தேதி ரிலீஸ் என ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் கூறியிருந்தார். இதனால், துணிவுக்கு முன் வாரிசு வந்துவிடும் என பேச்சுகள் வர தொடங்கின. ஆனால், துணிவும் ஜன. 11ஆம் தேதியைதான் குறிவைத்திருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. 

டிச.31ஆம் தேதி வெளியான துணிவு டிரைலரிலும் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், நேற்று வெளியான வாரிசு டிரைலரிலும் அது குறிப்பிடப்படவில்லை. இதனையடுத்து, வாரிசு படத்தின் டிரைலர் வெளியான சில மணிநேரங்களுக்கு பிறகு, துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

அதாவது, வாரிசு ஜன. 12ஆம் தேதி என உறுதிப்படுத்தாத நிலையில், முதலாவதாக முன்வந்து ஜன.11ஆம் தேதியில் துணிவு படம் திரைக்கு வரும் தெரிவிக்கப்பட்டது. எனவே, வாரிசும் ஜன. 11ஆம் தேதியில்தான் ரிலீஸாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை படக்குழு இன்று நள்ளிரவு உறுதிசெய்துள்ளது. 

இதனை வாரிசு படக்குழுவினர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர். திரையரங்க ஒதுக்கீடு, வசூல் விவரங்கள் ஆகியவற்றில் வேறுபாடு ஏற்படுவதை தடுக்க இரு படங்களும் ஒரே நாளில் களமிறங்க காத்திருக்கிறது. எனவே, பொங்கல் கொண்டாட்டம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகெங்கும் வரும் ஜன. 11ஆம் தேதியை தொடங்கிவிடும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நம்ம பவர் அந்த ரகம் – வெளியானது வாரிசு ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours