சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவது முறையாக ரஜினியும், இரண்டாவது முறையாக நெல்சன் திலீப்குமாரும் இணையும் படம் ‘ஜெயிலர்’.
இதற்கு முன்னர் ரஜினி, அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் நெல்சனும் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ கொடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது. படத்தின் இசை வெளியீடு எப்போது? படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விசாரித்தோம்.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்னை, கடலூர் பகுதிகளிலும் பின்னர், ஆதித்யா ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் வில்லனாக வசந்த் ரவி அவரின் மனைவியாக ரவீணா ரவியும் நடித்து வருகின்றனர். ஒருநாள் இரவில் நடக்கும் கதை இது. முத்துவேல் பாண்டியனாக அசத்தவிருக்கிறார் ரஜினி. பக்கா ஆக்ஷன் காமெடி ஜானர். இதுவரை 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என்றும், அதில் ரஜினியும் போர்ஷன் 75 சதவிகிதம் எடுத்து முடிக்கப்பட்டது என்றும்
சென்ற டிசம்பரில் ஷெட்டியூல் பிரேக் விடப்பட்டது. இப்போது பொங்கலுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இன்னும் இரண்டு சண்டைக்காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். அந்த விழாவிலேயே படத்தின் டீசரையும் வெளியிடுகின்றனர்.
+ There are no comments
Add yours