அசிம் ஹைப்பரான கேரக்டர். ஜாலியாகவும் இருப்பாரு… பயங்கரமா சண்டையும் போடுவாரு. நான் தான் என்கிற எண்ணம் அவருக்கு எப்பவும் அதிகமா இருக்கும். சீன் டயலாக் விஷயமா எங்க ரெண்டு பேருக்குமிடையில் ஷூட்டிங் ஸ்பார்ட்ல ஒரு வாக்குவாதம் நடந்துச்சு. சாதரணமா ஆரம்பிச்ச வாக்குவாதம் பெரிய சண்டையில் முடிஞ்சது. அடுத்த நாள் அவர் இத வச்சு ஆரம்பிச்சார். அப்ப ஹீரோயின் அது குறித்து பேச ஆரம்பிக்க அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய காரசாரமா விவாதம் ஆச்சு. ஹீரோயினுக்கு மொழி தெரியாது. இவர் பேசும்போது வார்த்தையை விட்டுட்டாரு. அவர் கையைத் தூக்கிட்டு அடிக்க வர்ற மாதிரி வரவும் ஹீரோயினுக்குக் கோபம் வந்துடுச்சு. அந்த புரொடியூசர் எங்க எல்லாரையும் சமாதானம் பண்ண டிரை பண்ணினார். அந்தப் பொண்ணுக்காக நாங்க எல்லாரும் ஒன்னா உட்கார்ந்திருந்தோம். அவன் மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு உறுதியா சொன்னதும் கடைசியா போனா போகுதுன்னு மன்னிப்பு கேட்டார் என்றவரிடம் மிஸ் ஆன டப்பிங் பற்றிக் கேட்டோம்.
`விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டீனாவுக்கு வாய்ஸ் டெஸ்ட் கொடுத்தேன். ஆனா, அதுல என் வாய்ஸ் செலக்ட் ஆகல. அப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். எனக்கு கமல் சார் ரொம்பப் பிடிக்கும். அவருடன் தான் நடிக்க முடியல அவர் படத்துல பேசவாச்சும் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, அதுவும் நடக்கல. என் வாய்ஸ் சின்ன பொண்ணு வாய்ஸ் இருக்கு… பெரிய பொண்ணு மாதிரி வாய்ஸ் வேணும்னு சொன்னாங்க. அதனால என்னால டீனாவுக்குப் பேச முடியல. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு!’ என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து தேவிப்பிரியா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
+ There are no comments
Add yours