நடிகை சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வரும் ‘குஷி’ படக்குழுவினர் அவர் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியில் அறிமுகமாக இருந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே ‘தி பேமிலிமேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றில் சமந்தா நடித்து வந்தார். உடல் நிலை காரணமாக இந்தத் தொடரில் இருந்தும் சமந்தா விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் படக்குழு இதை மறுத்துள்ளது.
“அவர் விலகவில்லை. இந்த மாதப் பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று படக்குழு கூறியுள்ளது.
+ There are no comments
Add yours