இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்
04 ஜன, 2023 – 12:36 IST

மலையாள திரையுலகில் துணை நடிகராக நுழைந்து குணச்சித்திர நடிகராக மாறி இன்று கதையின் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜோசப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படம் தமிழிலும் கூட விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இவரது நடிப்பில் வெளியான நாயாட்டு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இரட்ட என்கிற படத்தில் டைட்டிலுக்கு ஏற்றபடி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். ஒரு குணச்சித்திர நடிகர் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிப்பது இதுவே மலையாள சினிமாவில் முதல் முறை என்கிறார்கள். இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தயாரிக்கிறார். ரோஹித் கிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இரண்டு வித கெட்டப்புகளில் ஜோஜு ஜார்ஜ் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !

- துணிவு
- நடிகர் : அஜித் குமார்
- நடிகை : மஞ்சு வாரியர்
- இயக்குனர் :வினோத்

- வாரிசு
- நடிகர் : விஜய்
- நடிகை : ராஷ்மிகா மந்தனா
- இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours