சூர்யா இப்போது ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. சென்னை, கோவா ஆகிய இடங்களைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் மீண்டும் சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஆரம்பிக்கிறது. இது குறித்து படக்குழுவிடம் விசாரித்தேன்.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் ‘சிறுத்தை’ சிவா, முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் ‘சூர்யா-42’ படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பைத் தூண்டி வருகிறது. சூர்யா, திஷா பதானி, யோகி பாபு எனப் பலரும் நடித்து வருகின்றனர். இந்தக் கதை குறித்து சிவாவின் வட்டராத்தில் விசாரித்துபோது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கதை அவருக்குத் தோன்றிவிட்டது. ஆனால், அதை படமாக்கினால் அதற்கான வியாபாரம் சாத்தியமா என எண்ணியதால், அப்போது இந்தக் கதையை அவர் தொடாமல் இருந்தார். ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ போன்ற பிரமாண்ட படங்கள் கொடுத்த நம்பிக்கையில் அந்த கதையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்” என்கிறார்கள். இப்பவே 400 கோடிக்கு டேபிள் பிராஃபிட் ஆகிவிட்டது என்ற பேச்சும் உலவுகிறது.
ராஜ மௌலியின் ‘பாகுபலி’ படப்பிடிப்பு கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப டீமோடு இணைந்து நடந்தது. அது போல, ‘சூர்யா 42’ படப்பிடிப்பும் நடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே, படத்தின் 3டி தொழில்நுட்ப குழுவினர், அந்த லொக்கேஷனுக்கு சென்று ஆராய்கின்றனர். அதன்பின், ஆர்ட் டிபார்மென்ட்டுடன் இணைந்து அரங்கம் எப்படி அமைக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். பக்கா பிளானிங்கிற்கு பின், படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர். படப்பிடிப்பின் போதும் கிராஃபிக்ஸ் டீம் உடனிருக்கிறது.
சூர்யா பலவித தோற்றங்களில் வருகிறார் என நாம் முன்பே சொல்லியிருந்தோம். சென்னை எண்ணூரைத் தொடர்ந்து நாளை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை நடந்த மொத்த படப்பிடிப்பிலும் நிகழ்கால கட்டம்தான் படப்பிடிப்பு நடக்கிறது என்றும், ‘வீரமிக்க சகாப்த’ காலகட்ட படப்பிடிப்பு இன்னமும் தொடங்கப்படாமல் இருக்கிறது என்றும் பீரியட் காலகட்ட படப்பிடிப்பு அடுத்தடுத்த மாதங்களில் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். நாளை தொடங்கும் படப்பிடிப்பு பொங்கல் வரை நடக்கலாம் என்றும், அதன்பிறகு பொங்கல் விடுமுறை பிரேக்கிற்கு பின் மீண்டும் அதே இடத்தில் ஆரம்பிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் மொத்த டீமும் வியந்து சொல்லும் ஒரு விஷயம், ‘சூர்யாவின் உழைப்பு தான்.. அசுரத்தனமாக உழைக்கிறார். மிரள வைக்கிறார் சூர்யா” என்கிறார்கள்.
+ There are no comments
Add yours