பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு – துணிவு இரண்டு படமும் வெளியாவது என்று உறுதி செய்யப்பட்டதோ அன்று முதலே விஜய் – அஜித் ரசிகர்கள் சமூக வலைதள கோதாவில் முழுவீச்சில் இறங்கிவிட்டார்கள். வீரம் – ஜில்லா மோதலுக்கு பின் வாரிசு – துணிவு வெளியாவதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் ஃபுல் எனர்ஜியில் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களுக்குள் சென்றாலே வாரிசு – துணிவு சண்டைதான் தற்போது ஓயாமல் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. கோவில் படத்தில் வடிவேலு சொல்வதைப் போல் இரண்டு பேரில் யார் பெரிய ஆள், இரண்டு படங்களில் எது நன்றாக இருக்கும் என விஜய் – அஜித் ரசிகர்கள் அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரத்தம் வரும் அளவிற்கு அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் நெருங்க நெருங்க ரசிகர்களின் உக்கிரம் கூடிக் கொண்டே செல்கிறது.
ரசிகர்களுக்கு தீனி கொடுப்பதை போல் வாரிசு, துணிவு படத்தின் அப்டேட்டுகள் நாள் தோறும் ஓயாமல் வந்து கொண்டே இருக்கிறது. துணிவு படத்தின் ஒரு பாடல் வந்தால், வாரிசு படத்தின் ஒரு பாடல் வருகிறது. வாரிசு படத்தின் ஒரு பாடல் வந்தால் துணிவு படத்தின் மற்றொரு பாடல் வருகிறது. இப்படி மாறி மாறி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் முடிந்து சில நாட்களுக்கு அதன் டாக் இருந்து கொண்டே இருந்தது. நாங்களும் அப்டேட் விடுவோம் என்று துணிவு, களத்தில் இறங்கி டிசம்பர் 31 ஆம் தேதி ட்ரெய்லரை இறக்கினார்கள்.
அஜித் ரசிகர்கள் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடித் தீர்த்தார்கள். அதேபோல், வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்வும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியது. ஆடியோ லாஞ்சில் நிகழ்ந்த பல விஷயங்கள் குறித்த விவாதங்களும் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், வாரிசு தரப்பில் இருந்து புதிதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை, வாரிசு ட்ரெய்லரை எப்படி கட் செய்வது என்பது குறித்து பெரிய டிஸ்கஷனே படக்குழு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு ட்ரெய்லரில் ஸ்டண்டு சீன்கள் பெரிய அளவில் இருந்ததும், சில பஞ்ச்கள் கொஞ்சம் சீண்டும் வகையில் இருந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது. அதனால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் அதற்கு ஏற்ப ட்ரெய்லரை ரெடி பண்ண வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதனால், ஏற்கனவே எடிட் செய்யப்பட்ட வாரிசு ட்ரெய்லரில் புதிய மாற்றங்களை செய்து, ரசிகர்களை குஷிப் படுத்தும் விதமாகவும் துணிவு ட்ரெய்லருக்கு கவுண்ட்டர் கொடுக்கும் வகையிலும் வெளியிட முழுவீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறதாம். வாரிசு படம் ஃபேம்லி ஓரியெண்டர்ட்டு படம்.
க்ளைமேக்ஸ் காட்சிகள் எவ்வளவு செண்டிமெண்ட் ஆக இருக்கும் விஜய் எவ்வளவு உருக்கமாக நடிக்கிறார் என பிரகாஷ்ராஜ் சொன்னதையெல்லாம் நாம் கேட்டோம். ஆனால், துணிவு படத்தில் ஸ்டண்ட் சீன்கள் எக்கசெக்கமாக இருப்பதை அறிந்த வாரிசு படக்குழு ஃபேஜ் ஒர்க்கில் மேலும் சில சண்டைக் காட்சிகளை சேர்த்தார்கள் என்ற தகவலும் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ இரு படங்களின் தரப்பினரும் புரமோஷனை ஜெட் வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். படக்குழுவினருக்கு இணையாக ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கத்தியை சுழட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தங்களுக்காக ஓயாமல் கத்தியை சுழட்டிக் கொண்டிருக்கும் ரசிகர்களை கொஞ்சமேனும் அவர்களது படங்கள் திருப்தி படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours