‘நாதஸ்வரம்’ சீரியல் முலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவரும் நடிகர் சண்முகராஜாவின் தம்பியுமான முனீஸ் ராஜாவும் 2022ல் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். முகநூல் மூலம் நடிகர் ராஜ்கிரனின் ம்கள் பிரியா நாச்சியாருடன் இவருக்கு அறிமுகம் உண்டாக, இருவரும் காதலித்தனர். ஆனால் இவர்களின் திருமணத்துக்கு ராஜ்கிரண் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. விளைவு இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர். ‘பிரியா என் மகளே இல்லை’ என அறிவித்தார் ராஜ்கிரண். பிரியா அவரது வளர்ப்பு மகள் என்பது அப்போதுதான் வெளியுலகத்துக்கே தெரிய வந்தது.
திருமணம் முடிந்த பிறகும் கூட இரு தரப்பும் காவல் துறையில் மாறி மாறிப் புகார் அளித்ததும் நடந்தது. இரண்டு தரப்பையுமே சமாதானமாகப் போகும்படி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளது காவல்துறை.
வாடகை வீடு.. பிக் பாஸ் வீடு.. சொந்த வீடு?
சில மாதங்களுக்கு முன் குடியிருந்த வீட்டை மாற்றினார் நடிகை மைனா நந்தினி. அப்படியே அந்த வீட்டைச் சுற்றிக் காட்டி ‘ஹோம் டூர்’ வீடியோவும் வெளியிட்டார். சொந்த வீடா எனக் கேட்ட ரசிகர்களிடம், ‘அதுக்கு இன்னும் நாள் கிடக்கு’ எனச் சொல்லி இருந்தார். ஆனாலும் 2022 இவருக்கு நிறையவே கொடுத்துச் சென்றிருக்கிறது. கமல், விஜய் சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் ‘விக்ரம்’ வாய்ப்பைப் பெற்றார். கூடவே பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராகச் சென்று எண்பது நாட்களைக் கடந்து இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாடி வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வந்ததும் சொந்தமாக வீடு வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
+ There are no comments
Add yours