Kamal Rahul Gandhi Suriya 42 Hindhi Rights Samantha Tweet Reply Conversation Cinema News Wrap January 3

Estimated read time 2 min read

ஹேராம் படம் பற்றி பேசிய கமல்

ஹேராம் படம் பற்றி ராகுல்காந்தியிடம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கமளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உரையாடலின் போது கமல்ஹாசன் மகாத்மா காந்தி குறித்து பேசினார்.

உரையாடலின் போது கமல்ஹாசன் மகாத்மா காந்தி குறித்து பேசும் போது, ” நான் இப்போது காந்திஜியைப் பற்றி அதிகம் பேசுகிறேன்; ஆனால் என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் என் தந்தை ஒரு காங்கிரஸ்காரராக இருந்த போதும், நான் கடுமையாக காந்தியை விமர்சிக்க தொடங்கினேன். என் அப்பா ஒரு வழக்கறிஞராக இருந்த போது என்னிடம் வாதாட விரும்பவில்லை. மாறாக வரலாற்றை படிக்காமல், இன்றைய நிலைமையில் இருந்து பேசாதீர்கள் என்று மட்டுமே சொன்னார். 

               

news reels

எனக்கு 24 -25 ஆக இருக்கும் போது, நான் காந்தியை பற்றி அறிந்து கொண்டேன். அதன்பின்னர் நான் அவரின் ரசிகனாக அதிவேகமாக மாறிப்போனேன். என் பாபுவிடம் (காந்தி) மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதனாலேயே ஹேராம் படம் உருவானது என கமல் தெரிவித்துள்ளார். 

100 கோடி உரிமம் பெற்ற சூர்யா 42

சிவா இயக்கத்தில், சூர்யா 42 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 60 % முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது; தற்போது இந்த படத்தின் ஹிந்தி உரிமை ரூ.100 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

லவ் டுடே படம் பற்றி ட்வீட் செய்த போனி கபூர்

கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை அள்ளியது. அதன் பின், தெலுங்கிலும் இப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, இந்த படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க, வருணின் தந்தை டேவிட் தவான் அப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது.

அந்த தகவல் ட்விட்டரில் வைரலான நிலையில்,  “லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை.” என்று போனி கபூர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து விளக்கமளித்துள்ளார்.

சமந்தாவின் தடாலடி பதில்

அண்மையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடிய சமந்தா ,  கனெக்ட் மற்றும் ராங்கி ஆகிய படங்களின் போஸ்டரை பகிர்ந்து. “பெண்கள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டிற்கு ஒருநபர், “ ஆம், பெண்கள் உயர்வதே வீழ்வதற்குதான் என்றார். இந்த தனி நபரின் ட்வீட்டிற்கு, “மீண்டும் எழுந்து வருவது, எங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது நண்பரே. ” என்று தடாலடி பதிலை கொடுத்துள்ளார்.

தளபதி 67 அப்டேட்

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது என நகைச்சுவை நடிகர் மனோ பாலா ட்வீட் செய்தார். சில நேரம் கழித்து அந்த ட்வீட்டை டெலிட் செய்து, “மன்னியுங்கள் என் ட்வீட்டை என்னை நான் டெலிட் செய்து விட்டேன்.” என்று புதியதோர் ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours