Highly Expecting Movies In 2023 Varisu Adipurush Thunivu Ps2 Indian 2

Estimated read time 1 min read

 

2022 இல் தமிழ் சினிமா பல நல்ல படைப்புகளை மக்களுக்கு விருந்தாக அளித்தது. மற்ற மொழி திரைப்படங்களும் இங்கு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆரோக்கியமான ஆண்டாக தொடங்கியுள்ளது. ஆண்டின் தொடக்கத்திலையே இரண்டு பெரிய படங்கள் நேருக்கு நேர் மோத விருக்கின்றன. இந்தாண்டில் பல திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகளவில் நிலவி வருகிறது. அந்த எதிர்பார்ப்பு தமிழ் மொழி படங்களுக்கு மட்டுமின்றி மற்ற மொழி படங்களுக்கும் இருந்து வருகிறது.

வாரிசு, துணிவு:

தற்போது இந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் மோதுகின்றன.இந்த இரண்டு திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருந்து வருகிறது.சமீபத்தில் ‘துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.’வாரிசு’ திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது.குஷ்பு,ஷாம்,பிரகாஷ் ராஜ்.சர்த் குமார் என பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

news reels

                           

பொன்னியின் செல்வன் 2:

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்தது. பொன்னியின் செல்வன்-1. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகம் கொடுத்த லீடினால் புத்தகம் படிக்கதவர்களுக்கு அதிகளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

                   

இந்தியன் 2:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ‘இந்தியன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு படபிடிப்பு தள்ளிபோனது. கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் படபிடிப்பு தொடங்கியது.இத்திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது.

                 

ஜெயிலர்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ,ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.நெல்சனின் ‘பீஸ்ட்’ திரைப்படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.அதனால் நெல்சனும் நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.இந்த விமர்சனகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

               

ஆதிபுருஷ்:

பிரபாஸ்,சைஃப் அலி கான் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.இத்திரைப்படம் டீசர் வெளியாகி இதன் கிராபிக்ஸ் காட்சிகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.எனவே,இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருந்து வருகிறது.

                   

ஜவான்:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாவுள்ளது என்கிற பேச்சு பல ஆண்டுகளாக நிலவியது. இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து படத்தின் தலைப்பு ‘ஜவான்’ என அறிவித்தது படக்குழு.இத்திரைப்படம் இந்தாண்டு ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அட்லீ விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்ததை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது.

             

தங்கலான், வாத்தி:

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைபடத்திற்கும்,விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்திற்கும் எதிர்பார்புகள் பரவலாக இருந்து வருகிறது.

                 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours