Pathu Thala movie release date : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் சிம்பு. நடிப்பதில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் மூலம் அசத்தலான ‘கம்பேக்’ கொடுத்தார். அந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.
அடுத்ததாக கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். செப்டம்பர் இறுதியில் வெளியான அந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை சிம்பு கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | ஒருவழியாக சூரிக்கு கிடைத்தது விடுதலை! படப்பிடிப்பு நிறைவு!
மேலும் இதே ஃபார்மில் அவர் செல்லவேண்டுமெனவும் விரும்புகின்றனர். அதன்படி, சிம்பு அடுத்ததாக, சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கெனவே, ‘பத்து தல‘ படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
@PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna @priya_Bshankar @KalaiActor @Iamteejaymelody @Cinemainmygenes @KaviKabilan2 @Lyricist_Vivek @NehaGnanavel @Dhananjayang @DoneChannel1 @digitallynow pic.twitter.com/8ybsj0LQbI
— Studio Green (@StudioGreen2) December 31, 2022
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் இன்று வந்துள்ளது. இப்படம் 2023ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சுமார் 1 மாதம் முன்னர், பத்து தல வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் வில்லனாக நடிக்கிறார். நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக இது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | துணிவு நாள் – ரசிகர்கள் தெறி கொண்டாட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours