Pathu Thala Release Date Announcement Tomorrow December 31st 11 AM Simbu Pathu Thala Movie Latest Update

Estimated read time 1 min read

பத்து தல:

மாநாடு திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் இடையே சுமாரான வரவேற்பையே பெற்றது. அதைதொடர்ந்து எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகமால் இருந்த சிம்பு, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.

இதில், சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவர்களோடு பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நடப்பாண்டிலேயே இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தாமதமானது.

அப்டேட் கொடுத்த படக்குழு:

இந்நிலையில், பத்து தல படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், பத்து தல புத்தாண்டை கொண்டாட தயாரா?. ஆம், பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியை நாளை காலை 11 மணிக்கு வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் என, தயாரிப்பு நிறுவனமாக ஸ்டூடியோ கிரீன் தெரிவித்துள்ளது.

படத்தின் கதை:

சிம்பு நடித்துள்ள பத்து தல, கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில், சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார்.  நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலீஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது. அண்மையில் கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் படத்தின்  டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக ட்விட்டரில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கிருஷ்ணா ஏற்கனவே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours