பொண்ணு பார்க்கலாம்னு நினைச்சேன்.. மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க!
ஜனவரி 12 தேதியிட்ட ஆனந்த விகடன் ‘ரிமோட் பட்டன்’ பகுதியில் தனது திருமணம் குறித்துப் பேசியிருந்தார் நாஞ்சில் விஜயன். ’சகோதரியைக் கட்டிக் கொடுத்தாச்சு, தம்பிக்கும் ஒரு பிஸினசைத் தொடங்கிக் கொடுத்தாச்சு. இனி நமக்கு ஒரு பொண்ணைப் பார்த்துச் சட்டுபுட்டுனு செட்டில் ஆக வேண்டியதுதான்’ என அப்போது பேசியிருந்தார்.

’என்ன ஆச்சு பாஸ்’ எனக் கேட்டால், ‘எல்லாம் தெரிஞ்சும் இப்படிக் கேக்கறீங்களே பாஸ்’ எனச் சிரித்தவர், ‘பொண்ணாடா பார்க்குற, மாமியாரே வீடே காத்திருக்கு’ எனச் சம்பவம் செஞ்சிடுச்சு இந்த வருஷம். வாழ்க்கையில முதல் முறையா ஜெயிலைப் பார்த்துட்டு வந்திருக்கேன். என்ன வருத்தம்னா, ஏதாவது ஒரு தப்பைச் செஞ்சுட்டுப் போயிருந்தாக் கூட சந்தோஷமாப் போயிருப்பேன். எதுவுமே தப்பு செய்யாம போயிட்டு வந்ததுதான் ஆதங்கமா இருக்கு’ என்கிறார். யூ டியூபர் சூர்யா தேவி தந்த புகாரில் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் ஜெயிலில் இருந்தவர் சில தினங்களுக்கு முன் தான் வெளியில் வந்திருக்கிறார்.
+ There are no comments
Add yours