பழங்குடியினருக்கும் பணம் படைத்தவர்களுக்குமான போராட்டம் – ‘ஆர் யா பார்’ வெப்சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு  | Aar Ya Paar Official Trailer released

Estimated read time 1 min read

பழங்குடியின மக்களுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தை பேசும் ‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள தொடர் ‘ஆர் யா பார்’. இந்தியில் உருவான இத்தொடர், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 30-ம் தேதி வெளியாகிறது. ஆதித்யா ராவல் ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த தொடர் குறித்து தயாரிப்பாளருமான சித்தார்த் சென்குப்தா கூறுகையில், “இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாக கலக்கும் போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும். பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்த தொடர் கூறுகிறது” என்றார்.

ட்ரெய்லர் வீடியோ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours