“விஜய் என்ன பண்றாருன்னு எங்களுக்கே தெரியாது…” – ஷோபா சந்திரசேகர் விளக்கம் | Actor Vijay’s mother Shoba Chandrasekhar talks about her son

Estimated read time 1 min read

இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லாரும் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன். காமாட்சி அம்மனின் தரிசனம் பார்த்தேன். விஜய் படம் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கங்க எல்லாரும்” என்றார்.

மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “விஜய் எந்தப் படத்தில் எப்போது நடிக்கிறார், எப்படி நடிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. முதலில் இந்தப் படத்தில் (வாரிசு) அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே எனக்குத் தெரியாது, இதில் அடுத்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும். இந்தப் படம் (வாரிசு) ஃபேமிலி சப்ஜெக்ட் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும்” என்றவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஷோபா சந்திரசேகர், “அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours